வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்

Jaffna Manusha Nanayakkara Economy of Sri Lanka Foreign Employment Bureau
By Madheeha_Naz Dec 19, 2023 07:30 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

யாழ்ப்பாணம் ஹோமாகம மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட உள்ளது.

குறித்த நிலையங்கள் ஊடாக வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை எதிர்பார்த்துள்ளோருக்கு விசேட பயிற்சி திட்டங்கள் நடைபெறும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி

வெளிநாட்டு வேலையை எதிர்ப்பார்த்து உள்ளவர்களுக்கான துரிதப்படுத்தப்பட்ட மற்றும் செல்லவுள்ள நாட்டை இலக்காக கொண்ட விசேட பயிற்சி திட்டங்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் நடத்தப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல் | Foreign Employment Training Centers In Jaffa

தற்போது நாடளாவிய ரீதியில் வாடகைக்கு பெறப்பட்ட கட்டிடங்களில் குறைந்தபட்ச வசதிகளின் கீழ் இந்தப் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ் யாழ்ப்பாணம்,ஹோமாகம மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் பயிற்சி நிலையங்களை நிறுவ அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.

இந்நிலையில், நாட்டின் மூன்று பிரதேசங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை நிறுவுவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.