பாடசாலைகளில் அரசியல் நடவடிக்கைகளுக்கு தடை - அரசு அதிரடி நடவடிக்கை

Ministry of Education Bandula Gunawardane Sri Lanka Politician Education
By Fathima Mar 06, 2024 06:32 AM GMT
Fathima

Fathima

பாடசாலைகள் மற்றும் பாடசாலை வளாகங்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கு தடை விதிக்க உள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

அத்துடன் அதற்கான அதிகாரத்தை மாகாண ஆளுநர்களுக்கு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நேற்று அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் செயற்பாடுகள் 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

பாடசாலைகளில் அரசியல் நடவடிக்கைகளுக்கு தடை - அரசு அதிரடி நடவடிக்கை | Forbid Political Activities On School Property

பாடசாலை மற்றும் பாடசாலை வளாகங்களில் அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதாக பல்வேறு தரப்பிடமிருந்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவற்றினை கருத்திற்கொண்டு, அந்த பகுதிகளில் கூட்டங்கள் உள்ளிட்ட அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதனை தடை செய்வதற்கு மாகாண ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக  பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.