வெளிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்புவோருக்கான தீர்வை வரிச்சலுகை அதிகரிப்பு

Sri Lanka
By Nafeel Apr 28, 2023 06:50 AM GMT
Nafeel

Nafeel

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்கள், மீள நாட்டுக்கு திரும்பும்போது, விமான நிலையத்தில் வழங்கப்படுகின்ற தீர்வை வரிச் சலுகையை மேலும் அதிகரிப்பதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சலுகை, எதிர்வரும் மே முதலாம் திகதி தொடக்கம் வழங்கப்பட உள்ளதாக, கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சட்டரீதியாக, வங்கிகளின் ஊடாக, இலங்கைக்கு பணத்தை அனுப்பிய புலம்பெயர் தொழிலாளர்கள், அதிகரிக்கப்பட்ட இந்த தீர்வை வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவர்களாவர்.

வங்கி முறைமையின் ஊடாக, அனுப்பப்பட்ட பணத்தின் அளவு, இதன்போது கருத்திற்கொள்ளப்படுவதுடன், 5 வகைப்படுத்தலின் அடிப்படையில், இந்தச் சலுகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.