கடும் உணவு தட்டுப்பாட்டில் தவிக்கும் காசா மக்கள்
இஸ்ரேலின் தாக்குதல்களால்(Israel) காசாவிலுள்ள கட்டிடங்கள் சிதைத்து விட்டது மட்டும் இல்லாமல், அங்குள்ள உயிர்கள் பசியாலும் சிதறி கிடக்கின்றன.
சமீபத்தில் வெளியான ஒரு காணொளியில், ஒரு பலஸ்தீனப் பெண் தரையில் விழுந்த உணவை எடுத்து சேகரிப்பது பதிவாகியிருந்தது.
இந்தக் காட்சிகள், அங்கு நிலவும் மனிதாபிமான நெருக்கடியின் கடுமையை வெளிப்படுத்துகின்றன.
உணவு தட்டுப்பாட்டில் தவிக்கும் மக்கள்
இஸ்ரேலின் முழுமையான தடையால், கடந்த இரண்டு மாதங்களாக காசா பகுதியில் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்காமல், மக்கள் கடும் பசியால் வாடுகின்றனர்.
இதில் சுமார் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் அடிப்படை உணவிற்காகவே கஷ்டப்படுகிறார்கள். இன்னும் பலர் தினமும் ஒரு முறை மட்டுமே உணவு உண்ண முடிகின்றதாக காணப்படுகின்றது.
A video shows a Palestinian woman collecting food from the ground amid the famine in the Gaza Strip. pic.twitter.com/HW0wrgHmQr
— TIMES OF GAZA (@Timesofgaza) May 2, 2025
மேலும் குறித்த காணொளியில் காணப்படும் பெண், தரையில் விழுந்த உணவுகளை சேகரிப்பது, அங்கு நிலவும் உணவுப்பஞ்சத்தின் கடுமையை உணர்த்துகின்றதோடு, இது போன்ற காட்சிகள், காசா மக்களின் துயரமான நிலையை உலகிற்கு வெளிப்படுத்துகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |