சம்மாந்துறை - அம்பாறை வீதிக்கு குறுக்கே பாயும் வெள்ளம்! போக்குவரத்து நெருக்கடியில் மக்கள்
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் நேற்று 25ஆம் திகதி நள்ளிரவில் இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டிருந்தது.
அது அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கன மழை
இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கன மழை பெய்துவருகின்றது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகளில் போக்குவரத்து தடையும் ஏற்பட்டுள்ளது.
இதனடிப்படையில், சம்மாந்துறை - அம்பாறை வீதிக்கு குறுக்கே பாயும் வெள்ளம் காரணமாக போக்குவரத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.