கிண்ணியாவில் நீரில் மூழ்கிய வயல்கள் : கவலையில் விவசாயிகள்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிண்ணியா(Kinniya) பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளன.
இதனால் பாரிய நெருக்கடிகளையும் கவலைகளையும் எதிர்நோக்குவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வயல்நிலங்கள்
இதனடிப்படையில், சூரங்கல், வன்னியனார் மடு, சிவத்தபாலத்தடி உள்ளிட்ட சுமார் 1500 க்கும் மேற்பட்ட வயல் நிலங்களே நீரில் மூழ்கியுள்ளன.
இதன் போது விவசாயிகள் தெரிவித்ததாவது, கடன்பட்டு பிள்ளைகளின் நகைகளை அடகு வைத்து செய்த நெற் பயிர் செய்கை இம் முறை பெய்த கனமழையால் நீநில் மூழ்கி அழிந்துள்ளதால் பெரிதும் நஷ்டமடைந்துள்ளோம்.
மேலும் இதற்காக அரசாங்கம் எங்களுக்கு நஷ்டஈடுகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |