அரச திணைக்களத்தின் பொறுப்பற்ற நடவடிக்கை: பாடசாலைக்குள் புகுந்த வெள்ள நீர் (Photos)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்பாெழுது நிலவும் சீரற்ற காலநிலையால் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.
இதனால் புதுக்குடியிருப்பு நகரில் பாரிய அளவில் நீர் தேங்கி பாரிய அழிவுகளை அப்பகுதிசார் வர்த்தகர்களிற்கு, பாடசாலைகளிற்கு, மக்களிற்கு ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் பாதிப்பு
இதனால் பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளும், வர்த்தகர்களும், அப்பகுதி மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (17.11.2023) அதிகாலை பெய்த கன மழையால் பல வர்த்தக நிலையங்களிற்குள் நீர் புகுந்துள்ளது.
அத்தோடு புதுக்குடியிருப்பு ஸ்ரீசுப்பிரமணிய வித்தியாசாலை மற்றும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு செல்லும் வீதி அத்தோடு நகர்ப்பகுதியில் உள்ள பல வீடுகளிற்குள்ளும் வெள்ளநீர் புகுந்ததனால் பெரிதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் கடந்த சில வருடங்களாக மழைநீர் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கு சிறந்த நீர்வடிகாலமைப்பு பொறிமுறை ஒன்று புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு இல்லாமையும், அரச திணைக்களங்களின் அசண்டையீனமுமே காரணம் எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





