கனமழை காரணமாக கிண்ணியாவில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள தாழ் நிலப் பகுதிகள்

By Fathima Dec 16, 2023 10:42 AM GMT

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலக பகுதியில் உள்ள பல தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா பொலிஸ் நிலையம் உட்பட பல வீடுகள் காணிக்குள் என வெள்ள நீர் தேங்கி நிற்பதையும் காண கூடியதாகவுள்ளது.

இன்றும் (16) இவ் அடை மழை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீர் வடிந்தோடக்கூடிய வடிகான் வசதிகள் இல்லாமல் மழை நீர் தேங்கி நிற்கின்றன .

நீரை அகற்ற நடவடிக்கை

கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கனமழையால் வெள்ள நீரை வெளியேற்ற பெகோ இயந்திரம் ஊடாக நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கனமழை காரணமாக கிண்ணியாவில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள தாழ் நிலப் பகுதிகள் | Flood In Trincomale Kinniya

மக்களின் அன்றாட ஜீவனோபாயமாக அன்றாடம் கூலித் தொழில் செய்யும் மக்கள் இதன் போது பல்வேறு கஷ்டங்களை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா அண்ணல் நகர் பகுதி மக்களின் வீடு காணிகளுக்குள் வெள்ளம் புகுந்தததால் மீனவத் தொழில் உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

கனமழை காரணமாக கிண்ணியாவில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள தாழ் நிலப் பகுதிகள் | Flood In Trincomale Kinniya