தென்னிலங்கையின் கடற்கரையோரமாக மிதக்கும் முதலை!

Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Jun 07, 2023 11:50 PM GMT
Fathima

Fathima

தென்னிலங்கையின் வாத்துவைக் கடற்கரையோரமாக கடலில் மிதந்து திரியும் பாரிய முதலை காரணமாக பொதுமக்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர்.

நேற்று(07.06.2023) மாலை குறித்த முதலை அப்பிரதேசத்தில் மிதந்து திரிவதை நேரில் கண்ட பொதுமக்கள், முதலை சுமார் 12 அடிக்கும் கூடுதலான நீளம் கொண்டதாகும் என்று தெரிவித்துள்ளனர்.

வாத்துவை, மொல்லிகொட, தல்பிடிய மட்டுமன்றி பாணந்துறை அருகே பின்வத்தை வரையான கடற்கரைப் பிரதேசத்தில் பொதுமக்கள் குறித்த முதலையைக் கண்டுள்ளனர்.    

தென்னிலங்கையின் கடற்கரையோரமாக மிதக்கும் முதலை! | Floating In A Sea Of Ducks Public Fear

மக்களுக்கான அறிவுறுத்தல்

இதற்கு முன்னரும் இப்பிரதேசங்களில் முதலைகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ள போதிலும் வனஜீவராசிகள் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.  

தகவல் அறிந்த பொலிஸார், கடற்கரையோரப் பிரதேசங்களில் பாதுகாப்பாக நடமாடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.