சென்னைக்கான விமான சேவை மறு அறிவித்தல் இரத்து

By Mayuri Dec 05, 2023 01:53 PM GMT
Mayuri

Mayuri

கொழும்பில் இருந்து சென்னைக்கான விமானங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழையை ஏற்படுத்திய மைச்சாங் புயல் ஆந்திரா கடற்கரையில் உள்ள பாபட்லா அருகே கரையொதுங்கத் தொடங்கியது.

சென்னையில் மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்னிந்தியாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று திட்டமிடப்பட்டிருந்த இரண்டு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து சென்னைக்கான விமானங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.