இலங்கை கடற்றொழிலாளர்கள் ஐவரைச் சிறைப் பிடித்தது இந்தியக் கடற்படை

Mannar Sri Lanka Sri Lanka Fisherman
By Fathima Nov 21, 2023 11:53 AM GMT
Fathima

Fathima

இலங்கை கடற்றொழிலாளர்கள் ஐந்து பேர் இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கடற்றொழிலாளர்கள் இன்று (21.11.2023) செவ்வாய்க்கிழமை மதியம் விசாரணைக்காக தமிழக கடலோர காவல் குழுமம் பொலிஸார் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் .

பொலிஸார் விசாரணை

இந்தியா - இராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை கடற்றொழிலாளர்கள் ஒரு படகுடன் ஐந்து பேரை இந்திய கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்றொழிலாளர்கள் ஐவரைச் சிறைப் பிடித்தது இந்தியக் கடற்படை | Five Sri Lankan Fishermen Captured By Indian Navy

 மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீன் பிடிப்பதற்காக எல்லை தாண்டி வந்தார்களா அல்லது வேறு ஏதும் கடத்தல் பொருள் கொண்டு வந்தார்களா என்ற கோணத்தில் பொலிஸார் அவர்களை விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.