நிமால் லன்சா தலைமையில் புதிய அரசியல் கூட்டணி
நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்சா தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
ஏற்கனவே இந்த புதிய அரசியல் கூட்டணியில் இணைந்து கொள்வதற்கு ஐந்து அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்சா தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் இந்த கூட்டணியின் ஆரம்ப கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு ராஜகிரிய பகுதியில் இந்த கூட்டணியின் அலுவலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ரீலங்கா பொதுஜன முன்னணி
மேலும் பல கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள தரப்பினர் இந்த கூட்டணியில் இணைந்து கொள்ள விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவிற்கு தாம் அறிவித்துள்ளதாக நிமால் லான்சா தெரிவிக்கின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாபா, லசந்த அழகியவன்ன, துமிந்த திசாநாயக்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, நலின் பெர்னாண்டோ, மஹிந்த அமரவீர உள்ளிட்டவர்கள் புதிய கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.