மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு
நாட்டைச் சூழவுள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளும் கடற்றொழிலுக்குச் செல்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சீரற்ற வானிலை
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலவும் ஆபத்தான சீரற்ற வானிலை காரணமாக கடற்றொழிலுக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆபத்தான கடல் பிராந்தியங்களில் தற்போது தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளும் கரைக்குத் திரும்புமாறும் அல்லது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகள் மற்றும் வானொலிச் செய்திகள் குறித்து அதிக அவதானம் செலுத்துமாறும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.