கடற்றொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்: வெளியான அறிவிப்பு
கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய திட்டம் அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் விவசாய காப்புறுதி வாரியம் அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியான நபர்களை அடையாளம் காணும் பணிகள் தற்போது நடைப்பெற்று வருவதாகவும், இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் வாரியத்தின் தலைவர் பிரேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்தார்.
ஓய்வூதியம்
விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு வாரியமும், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும் இணைந்து இத்திட்டத்தை மீண்டும் தொடங்கவுள்ளன.
முந்தைய காலத்தில் இத்திட்டம் நிறுத்தப்படுவதற்கு முன் சுமார் 60,000 கடற்றொழிலாளர்கள் பலன்களை பெற்று வந்ததாகவும், வரவிருக்கும் கட்டத்தில் அந்த எண்ணிக்கையை விட அதிகமான மீனவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஜசிங்கராச்சி குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |