தவறான முடிவெடுத்த உலகின் முதல் ரோபோ: வெளியாகியுள்ள தகவல்
South Korea
World
Technology
By Aadhithya
உலகிலேயே முதன்முறையாக ரோபோ ஒன்று தவறான முடிவெடுத்துள்ளதாக தென் கொரியாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்கொரியாவில் குமி நகரசபையில் அரச ஊழியராக பணியாற்றி வரும் ரோபோ ஒன்று தான் பணிபுரிந்து வந்த கட்டிடத்தில் உள்ள மாடிகளுக்கு இடையில் இருந்த படிக்கட்டின் கீழே ரோபோ செயலிழந்து கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழில்நுட்பக் காரணம்
எனினும், குறித்த சம்பவத்திற்கான தொழில்நுட்பக் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில் செயலிழந்த ரோபோவிற்க்கு குமி நகர மக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும். அந்நாட்டு ஊடகங்கள் இந்த சம்பவத்தை நாட்டின் முதல் ''ரோபோ தற்கொலை'' என்று தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |