கொழும்பு துறைமுகத்தின் 6வது நுழைவாயிலுக்கு முன்னால் துப்பாக்கி சூடு ; 8 பேர் காயம்

Colombo Sri Lanka
By Nafeel May 02, 2023 01:18 AM GMT

கொழும்பு துறைமுகத்தின் 6 வது நுழைவாயிலுக்கு அருகில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 8 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டில் புளூமெண்டல் பகுதியை சேர்ந்த சிலரே காயமடைந்துள்ளனர்.

இவர்களில் 5 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு துறைமுகத்தின் 6 வது நுழைவாயிலுக்கு அருகில் உள்ள துறைமுகத்தில், இரும்பு திருட வந்த இருவரை தடுக்க முற்பட்ட வேளை, அங்கு வந்த சிலரால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்கச் சென்ற நபர் மீது மற்றுமொரு தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.