மட்டக்களப்பில் திடீரென தீப்பற்றி எரிந்த கடைகள்! 4 மணித்தியால போராட்டத்தின் பின் அணைக்கப்பட்ட தீ

Batticaloa Fire
By Bavan Jul 07, 2026 10:26 AM GMT

மட்டக்களப்பு - சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று (07.07.2026) அதிகாலை ஐந்து மணியளவில் தீப்பற்றியுள்ளது.

இதனையடுத்து மட்டு. மாநகரசபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பொலிஸ் தீயணைப்பு பிரிவு இணைந்து 4 மணித்தியாலம் போராட்டத்தின் பின்னர் காலை 9 மணிக்கு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

முற்றாக எரிந்துள்ள கடைகள்

இருந்தபோதும் சென்றல் வீதியில் உள்ள சிறுவர் ஆடை விற்பனை கடை தொகுதி மற்றும் பஸார் வீதியில் உள்ள கையடக்க தொலைபேசி திருத்தும் கடை என்பன முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகிறது.

மட்டக்களப்பில் திடீரென தீப்பற்றி எரிந்த கடைகள்! 4 மணித்தியால போராட்டத்தின் பின் அணைக்கப்பட்ட தீ | Fire Out At A Shopping Complex In Batticaloa

அத்துடன் தங்க ஆபரண கடைகள் உட்பட 5 கடைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் இந்த இரு வீதிகளினதும் போக்குவரத்து நடவடிக்கை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மட்டு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.