புதுக்கடை நீதிமன்ற கட்டடப்பகுதியில் தீ விபத்து
Colombo
Supreme Court of Sri Lanka
By Kamal
கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற கட்டடப் பகுதியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்து காரணமாக எவருக்கும் உயிர்ச் சேதங்களோ காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த தீ விபத்து காரணமாக ஆவணங்களுக்கோ அல்லது வழக்கு பொருட்களுக்கோ சேதம் விளைவிக்கப்பட்டதா என்பது குறித்து இன்னமும் தகவல்கள் வெளியிடப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.