இந்தியாவில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் தீப்பரவல்

India Fire Accident
By Madheeha_Naz Jan 13, 2024 09:12 PM GMT

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம், டோம்பிவ்லி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளத்தில் இன்று (13) காலை திடீரென தீ பிடித்து 18வது மாடி வரை மளமளவென தீ பரவியது.

தீயணைப்பு துறை

இதில் அந்த கட்டடத்தில் வசித்து வந்த அனைவரும் உடனடியாக பாதுகாப்பாக வெளியேறினர்.

இந்தியாவில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் தீப்பரவல் | Fire Accident In India

இதையடுத்து, இந்த பயங்கர தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.