இலங்கையின் தேவை அடிப்படையில் கடன்களை வழங்க தயார்: கொரியா அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Money World
By Laksi Sep 27, 2024 03:40 PM GMT
Laksi

Laksi

புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல், மோசடி ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கவும், இலங்கையின் தேவை அடிப்படையில் கடன்களை வழங்கவும் தயார் என கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்தோடு, அநுர தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் அந்த நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலில் தனி கட்சியில் களமிறங்கும் நஸீர் அஹமட்..!

பொதுத் தேர்தலில் தனி கட்சியில் களமிறங்கும் நஸீர் அஹமட்..!

கொரியா இணக்கம்

கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் தேவை அடிப்படையில் கடன்களை வழங்க தயார்: கொரியா அறிவிப்பு | Financing Corrupt Activities Anura Korea Support

இந்த சந்திப்பில் இலங்கைக்கான கொரிய தூதுவர் மியோன் லீ, பிரதி தூதுவர் சோன்கய் ஜியோங், KOICA இன் பணிப்பாளர் யுன்க்‌ஜின் கிம், பிரதி பணிப்பாளர்களான யோன்க்வன் கிம், யுன்சூ ஜியோன், DIMO வின் நிறைவேற்று அதிகாரி ரொஷான் சமரசிங்க மற்றும் இலங்கை புகையிரத திணைக்களத்தின் பிரதி நிறைவேற்று அதிகாரி பீ.எம்.யூ.எஸ்.பன்னஹெக்க உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கையில் புதிய ஜனாதிபதி பதவியேற்றுள்ள நிலையில், பல நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் வழங்கப்படவுள்ள உதவிகளை தொடர்பிலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

புதிய பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW