ஓய்வூதிய பயனாளிகளுக்கு மகிழ்ச்சி தகவல்
இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள ஓய்வூதிய தொகையை ஜனவரி மாதம் முதல் வழங்க திட்டமிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், ஓய்வூதியம் பெறுவோரின் நிதி தொடர்பிலான முரண்பாடுகளை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தெரணியகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனவரி மாதம் முதல் வழங்க நடவடிக்கை
மேலும் தெரிவிக்கையில்,
“ஓய்வூதியம் பெருபவர்களின் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள 2500 ரூபாவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
நீண்டகாலமாக நிலவி வரும் ஓய்வூதியர்களின் ஊதிய வேறுபாடு குறித்து அரசு உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகிறது.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், ஓய்வூதிய முரண்பாடுகளை அரசாங்கம் அங்கீகரித்து அதற்கான தீர்வை காண வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்” என்றார்.