மின் கட்டணம் தொடர்பில் எடுக்கப்பட்ட இறுதி முடிவு!

Sri Lanka Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices
By Rakshana MA Dec 07, 2024 12:37 PM GMT
Rakshana MA

Rakshana MA

அடுத்துவரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் பேண வேண்டும் என இலங்கை மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைக்கு அமைய பல எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், நீர் மின் உற்பத்தி உயர்மட்டத்தில் இருக்கும் பின்னணியில் ஏன் மக்களுக்கு அதன் பலனை பெற்றுத் தர முடியாது என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும் என எதிர்க்கும் தரப்பினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கு பொலிஸ் அதிகாரிகளுக்கான இடமாற்றம்

வடக்கு - கிழக்கு பொலிஸ் அதிகாரிகளுக்கான இடமாற்றம்


கட்டண திருத்தும் கொள்கை

இந்த நிலையில், ​​மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை திருத்தும் கொள்கையின்படி, இந்த ஆண்டு இரண்டு முறை மின் கட்டணம் குறைக்கப்பட்டது. அத்துடன் கடந்த ஒக்டோபரில் மின் கட்டணம் திருத்தம் செய்யப்பட இருந்தபோதிலும், அது டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இறுதியில், இலங்கை மின்சார சபையின் மின் கட்டணத்தை 6% முதல் 11% வரை குறைக்கும் முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்தது.

மின் கட்டணம் தொடர்பில் எடுக்கப்பட்ட இறுதி முடிவு! | Final Decision For Electricity In Sri Lanka

தற்போதுள்ள நிலவரத்தை பொருத்து மின்கட்டணத்தை அதிக சதவீதத்தில் குறைக்கலாம் என்று குறிப்பிட்டு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறித்த முன்மொழிவை நிராகரித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை திருத்தாமல் தொடர்ந்தும் பேண வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் நேற்று(06) மீண்டும் முன்மொழிவு ஒன்றை முன்வைத்தது.

கிண்ணியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட குடும்ப தலைவர்

கிண்ணியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட குடும்ப தலைவர்

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு

இது தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வினவிய போது,

மின்சாரக் கட்டணத்தை திருத்தினால் 1.02% என்ற குறைந்த சதவீதத்தில் செய்யலாம் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மின் கட்டணத்தை திருத்தாமல் இருப்பதற்கு மேற்கொண்ட யோசனைக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மின் கட்டணம் தொடர்பில் எடுக்கப்பட்ட இறுதி முடிவு! | Final Decision For Electricity In Sri Lanka

தொடர்ந்தும், கடந்த காலத்தில் பெய்த கனமழையால் நீர்மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்திருந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி நீர்மின் உற்பத்தி 56% ஆக காணப்பட்டது.

எனினும், மின்சார சபையின் முன்மொழிவு தொடர்பான தனது நிலைப்பாட்டை எதிர்வரும் வருடம் ஜனவரி 3ஆம் வாரத்திற்குள் அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியசாலையில் இருந்து அகற்றப்படும் இயந்திரம்: கண் கலங்கி நின்ற வைத்தியர்கள்!

வைத்தியசாலையில் இருந்து அகற்றப்படும் இயந்திரம்: கண் கலங்கி நின்ற வைத்தியர்கள்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW