இராணுவ முகாமில் ஒரு வகை காய்ச்சல் பரவல்: தனிமைப்படுத்தப்பட்ட வீரர்கள்
மன்னார், விடத்தல்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் உள்ள இராணுவ வீரர்களுக்கு ஒரு வகையான காய்ச்சல் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் முகாமிற்குள்ளேயே இராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், முகாமில் உள்ள சுமார் 20 இராணுவ வீரர்கள் ஒருவித காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட வீரர்கள்
இந்த தொற்று காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களின் குழுவொன்றை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முகாமில் உள்ள மேலும் 500 இராணுவத்தினர் முகாமிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுமார் 4 நாட்களாக காய்ச்சல் பரவி வருவதாக தெரியவந்துள்ளதாகவும், காய்ச்சல் பரவுவதற்கான காரணத்தை துல்லியமாக கண்டறிய ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த நோயைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |