பண்டிகைக் கால இணைய மோசடிகள்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lankan Peoples Festival Social Media
By Amal Mar 13, 2026 09:02 AM GMT
Amal

Amal

சித்திரை புத்தாண்டு மற்றும் எதிர்வரும் பண்டிகைக் காலங்களை இலக்கு வைத்து இணையத்தில் முன்னெடுக்கப்படும் பணமோசடிகள் மற்றும் போலி விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை பிரிவு (SLCERT) கோரிக்கை விடுத்துள்ளது.

பண்டிகைக் கால தள்ளுபடிகள், பணப் பரிசுகள் அல்லது விசேட சலுகைகள் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் போலி விளம்பரங்கள் மற்றும் லிங்க்குகள் (Links) பகிரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி முறைப்பாடுகள்

இவ்வாறான சந்தேகத்திற்கிடமான லிங்க்குகளை கிளிக் செய்யும்போது, அவை உங்களை போலி இணையதளங்களுக்கு அழைத்துச் சென்று, உங்கள் தனிப்பட்ட தரவுகள் மற்றும் வங்கித் தகவல்களைத் திருடக்கூடும் என SLCERT அமைப்பின் சிரேஷ்ட பாதுகாப்பு பொறியாளர் சாருக தமுனுபொல எச்சரித்துள்ளார்.

பண்டிகைக் கால இணைய மோசடிகள்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Festive Season Internet Scams Warning The Public

வரும் காலங்களில் 'பொசன் மஹா டேட்டா தன்சல' (Poson Maha Data Dansala) போன்ற பெயர்களிலும் மோசடிகள் அரங்கேற வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இவ்வாறான பல இணைய மோசடி முறைபாடுகள் பதிவாகியுள்ளன.