உலக சந்தையின் நிலைமை! உர மானிய விலை ஏற்படவுள்ள மாற்றம்

Sri Lanka K.D. Lalkantha NPP Government Farmers Issues
By Chandramathi Nov 26, 2025 06:06 AM GMT
Chandramathi

Chandramathi

உலக சந்தையின் நிலைமையைக் கருத்தில் கொண்டு உர மானிய விலையை தீர்மானிக்க வேண்டும் என்று விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முறையான வேலைத்திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் விவசாயிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளின் பிரச்சினை

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், நீண்ட காலமாக நெல் சாகுபடியில் கவனம் செலுத்தி, நெற்பயிர் விவசாயிகளைப் பாதுகாக்க ஒரு குறிப்பிட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

உலக சந்தையின் நிலைமை! உர மானிய விலை ஏற்படவுள்ள மாற்றம் | Fertilizer Subsidy Price Srilanka

இருப்பினும், மற்ற பயிர்கள் தொடர்பாக நாட்டில் குறிப்பிட்ட திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம், அனைத்து விவசாயிகளையும் போலவே, நெற்பயிர் விவசாயிகளையும் பாதுகாப்பதும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் ஆகும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

உற்பத்திச் செலவு

விவசாயிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இனி தனிமையில் பணியாற்றக்கூடாது என்றும், இனிமேல் அனைத்து தரப்பினரும் ஒரே குழுவாக இணைந்து விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

அரிசி இறக்குமதியைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நெல் கொள்முதல் விலை முறையை நெறிப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நெல் உற்பத்தியை மேலும் அதிகரிப்பது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

உலக சந்தையின் நிலைமை! உர மானிய விலை ஏற்படவுள்ள மாற்றம் | Fertilizer Subsidy Price Srilanka

உற்பத்திச் செலவுகளைக் குறைத்து விவசாயிகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், மானிய விலையில் நுகர்வோருக்கு தரமான அரிசியை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு அநீதி இழைக்காத வகையில் நெல்லுக்கு நிலையான விலையை நிர்ணயிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கலந்துரையாடல் நடைபெற்ற அம்பாறை பகுதி விவசாயிகள், நெல் சாகுபடிக்கு உர மானியங்கள் இல்லாததால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், உரம் வாங்குவதற்காக அரசாங்கம் வழங்கும் பணத்தை வங்கியில் வைப்பதற்கான திட்டத்தை அவசரமாக தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.