விவசாயிகளுக்கான உரமானியம் தொடர்பிலான அறிவித்தல்
2025ஆம் ஆண்டிற்கான சிறு போகத்திற்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உரங்கள் இன்னும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சேனாநாயக்க சமுத்திரத்தின் கீழ் பயிர்ச்செய்கை செய்யும் அம்பாறை மற்றும் சமாதானபுரம் விவசாயிகள் இந்த ஆண்டு சிறுபோகத்திற்கான பயிர்செய்கையை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில்,
இந்த மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் சிறுபோகத்துக்கான நாற்று நடும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.
மானிய விலையில் உரம்
எனினும் அரசாங்கத்தால் மானிய விலையில் வழங்கப்படும் உரம் இதுவரை எந்த விவசாயிக்கும் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேவேளை, நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு சிறு போகத்திற்கான உர மானியத்தை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை எந்தவொரு திட்டத்தையும் தயாரிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை தேசிய விவசாயிகள் ஒன்றியம் (National Farmers’ Union) அறிவித்துள்ளது.
அத்துடன் விவசாயிகள் தங்கள் பயிர்ச்செய்கை பணிகளை ஆரம்பித்திருந்தாலும், இதுவரை உர மானியம் வழங்குவதற்கான அடிப்படை நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளப்படவில்லை என தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் (Anuradha Tennakoon) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |