முறைதவறிய காதல் விவகாரம்: பெண் சட்டத்தரணிக்கு ஏற்பட்ட பரிதாபம்
முறைதவறிய காதல் விவகாரம் காரணமாக பெண் சட்டத்தரணியொருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாணந்துறை பிரதேசத்தில் நேற்று(24.06.2023)மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த சட்டத்தரணியை கத்தியால் குத்திய நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று தடவைகள் கத்தி குத்து
கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கத்திகுத்துக்கு இலக்கான சட்டத்தரணியுடன் நீண்ட காலம் முறைதவறிய உறவில் இருந்துள்ளதாகவும், சட்டத்தரணி அண்மைக்காலமாக உறவை தவிர்த்ததால் பாணந்துறையில் இருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது முதுகிலும் கையிலும் மூன்று தடவைகள் கத்தியால் குத்தியதாகவும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்ய சென்ற போது பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கடமையாற்றிய போக்குவரத்து உத்தியோகத்தர் ஒருவருக்கும் கையில் கத்திக்குத்து காரணமாக சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கத்திக் குத்து காரணமாக காயமடைந்த பெண் சட்டத்தரணி பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேக நபரை பாணந்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |