வாழைச்சேனையில் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை நிலையமாக செயல்பட்ட வீடொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையானது, நேற்று (11) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன்போது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 5 கிராம் 670 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசாரணை
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலே மேற்படி சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய பெண் என்பதுடன் இவர் நீண்ட காலமாக குறித்த போதைப்பொருள் விற்பனை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அதேவேளை கைதான பெண்ணின் உறவினர்கள் 4 பேர் ஏற்கனவே போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |