நீர் தேங்கியிருந்த 16 அடி குழியில் விழுந்த தந்தை, மகள்!
கொத்தடுவை IHD நீர் வழங்கல் சபைக்கு அருகாமையில் இன்று (19) காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த தந்தையும் மகளும் நீர் தேங்கியிருந்த குழியொன்றில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்கள் சுமார் 16 அடி ஆழமுள்ள குழியில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், தந்தையும் மகளும் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த தந்தையும் மகளும் குழியில் தவறி விழுந்ததில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பின்னர், தந்தை மகளை குழியில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளதை தொடர்ந்து பிரதேசவாசிகள் அவர்கள் இருவரையும் காப்பாற்றியுள்ளனர். இதேவேளை, குடிநீர் குழாய் உடைந்ததன் காரணமாக இவ்வாறு பாரிய குழாய் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.