கந்தளாயில் நோன்பு பெருநாள் கொண்டாட்டங்கள்.
Hijra - Islamic New Year
Sri Lanka
By Nafeel
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாயில் பிரதேசத்தில் நோன்பு பெருநாள் தொழுகைகள் கந்தளாய் இலாஹிய்யா ஜும்ஆ பள்ளி மற்றும் பேராற்று வெளி வாயலில் ஜும்ஆ பள்ளி வாயலிலும் சிறப்பாக நடைபெற்றன.
ஆண்களுக்கு வேறாகவும்,பெண்களுக்கு வேறாகவும் தொழுகைகள் இடம்பெற்றன. ஆண்கள், பெண்கள்,மற்றும் சிறுவர்கள் புத்தாடைகள் அணிந்து பள்ளிக்குச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
பெருநாள் தொழுகைகளை பேஷ் இமாம் ஏ.ஆர்.ஜவாஹிர் மௌலவி நிகழ்த்தினார். பள்ளிவாயலுக்கு வெளியில் பாதுகாப்பு கடமையில் பொலிஸார் நின்றதையும் காணமுடிந்தது.






