யாழ். தென்மராட்சியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

Jaffna Sri Lanka Police Investigation Northern Province of Sri Lanka Death
By Fathima Aug 14, 2023 09:40 AM GMT
Fathima

Fathima

யாழ்ப்பாணம் - தென்மாராட்சி, மட்டுவில் கிழக்கில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் நேற்று (13.08.2023) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெல்லியடி தபாலகத்தில் பணிபுரியும் 36 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேதப் பரிசோதனை

யாழ். தென்மராட்சியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு | Family Member Was Recovered Dead Body In Jaffna

குறித்த நபர் தவறான முடிவை எடுத்து தனது உயிர் மாய்த்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.