கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

Colombo Sri Lanka Police Investigation Crime
By Fathima Jun 23, 2023 07:52 PM GMT
Fathima

Fathima

கொழும்பு- கொலன்னாவைப் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் நேற்று (23.06.2023) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய சுப்பிரமணியம் தயாபரன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த இருவர், கூரிய ஆயுதத்தால் அவரைச் சரமாரியாக தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு | Family Man Brutally Hacked To Death In Colombo

கொடுக்கல் - வாங்கல் விவகாரம்

இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அயலவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொடுக்கல் - வாங்கல் விவகாரமே இந்தக் கொலைக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்துக் கொலையாளிகளைத் தேடும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.