எச்சரிக்கை தேவை : போலி நாணயத்தாள்கள் புழக்கம்
Sri Lanka Police
Sinhala and Tamil New Year
Sri Lanka
By Fathima
இந்த வருடத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், தீவின் பல பகுதிகளிலும் கள்ளப் பணத்தை மாற்றுவதற்கு ஆட்கள் வரலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
பொதுமக்களிடம் கோரிக்கை
மேலும் பண பரிவர்த்தனை செய்யும் போது எந்த நோட்டில் மாற்றம் இருந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.