போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

Facebook Sri Lanka Police Investigation
By Dhayani Apr 11, 2024 02:30 AM GMT
Dhayani

Dhayani

தங்களின் பெயரில் இயங்கும் போலி பேஸ்புக் கணக்குகளை நீக்கக்கோரி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நாளாந்தம் சுமார் 200 முறைப்பாடுகள் அனுப்பப்படுவதாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரி ஜயசிங்க (Darshika Kumari Jayasinghe) தெரிவித்துள்ளார்.

குறித்த முறைப்பாடுகளின் படி, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் போலிக்கணக்குகளை நீக்கக் கோரியதாக துணை இயக்குநர் கூறியுள்ளார்.

போலிக் கணக்குகளை அகற்றக்கோரி தினசரி அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் வருவதால், சில சமயங்களில் முந்தைய கோரிக்கைகளின்படி போலி கணக்குகள் அகற்றப்பட்டதா என்பதை சரிபார்க்க கூட பேஸ்புக்கில் வாய்ப்பு இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கை

 

fake-facebook-accounts-

போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் நடவடிக்கை

அத்துடன், இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் சுமார் 1500 முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் பெண்களும், குழந்தைகளுமே பெரும்பான்மையான முறைப்பாடுகளுக்கு பலியாகி உள்ளதாகவும் தர்ஷிகா குமாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வேலையை இழக்கும் அபாயத்தில் ஆயிரக்கணக்கான விமானப்படை வீரர்கள்

வேலையை இழக்கும் அபாயத்தில் ஆயிரக்கணக்கான விமானப்படை வீரர்கள்

 

முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய சொகுசு வாகனங்களில் பெருந்தொகை வாடகை மோசடி

முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய சொகுசு வாகனங்களில் பெருந்தொகை வாடகை மோசடி