முகத்தை முழுமையாக மூட தடை: சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிரடி

Evangelical People's Party of Switzerland Green Liberal Party of Switzerland Green Party of Switzerland Switzerland Labour Party Switzerland
By Rakshana MA Nov 09, 2024 01:50 PM GMT
Rakshana MA

Rakshana MA

சுவிட்சர்லாந்தில்(Switzerland) 2025ஆம் ஆண்டு முதல் முகத்தை முழுமையாக மறைத்துக் கொண்டு பொது இடங்களில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

அடுத்த வருடம் ஜனவரி 1ஆம் திகதி முதல் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த சட்டத்தினை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தடைகளை தாண்டி சட்டம் நடைமுறைக்கு

இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது இடங்களில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகத்தை முழுமையாக மூட தடை: சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிரடி | Face Covering Practice Ban On Swiss

இது தொடர்பாக கடந்த 2021ஆம் ஆண்டு தீர்மானம் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் இதற்கு அந்நாட்டிலுள்ள முஸ்லிம் அமைப்புகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்த நிலையிலேயே, தற்போது இந்த அறிவிப்பு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும், விமானங்களுக்குள் மற்றும் தூதரக அல்லது தூதரக வளாகங்களில் இந்த தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாது என குறிப்பிட்டுள்ளது.

விதிவிலக்குச் சலுகைகள்

இதனை தொடர்ந்து, வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தளங்களிலும் இந்த சட்டம் பொருந்தாது என்றும் அந்நாட்டின் ஆட்சியாளர் பெடரல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகத்தை முழுமையாக மூட தடை: சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிரடி | Face Covering Practice Ban On Swiss

மேலும், உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக்கொள்ளலாம். ஆனால், மத ரீதியாக அல்லது தட்ப வெப்ப நிலை காரணமாக இதனை செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்தோடு, பொது இடங்களில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத பெண்கள் முகத்தை மூடிக்கொள்ள முன் அனுமதி பெறலாம் எனும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத 40 சடலங்கள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத 40 சடலங்கள்

இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட தடுப்பூசி திட்டம்

இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட தடுப்பூசி திட்டம்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW