இலங்கையர்களின் கண் கரு விழிகள் பாகிஸ்தான் இராணுவ கண் மருத்துவமனைக்கு நன்கொடை
பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரவி விஜேகுணரத்ன, ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் இராணுவ கண் மருத்துவமனையின் பணிப்பாளர் பிரிகேடியர் வக்கரிடம், இலங்கையில் இறந்தவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து கண் கருவிழிகளை தானமாக வழங்கியுள்ளார்.
இந்த நடவடிக்கை பாகிஸ்தானில், பார்வை இழந்தவர்களின் கண் பார்வையை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நன்கொடையின் மூலம் வழங்கப்பட்ட கரு விழிகள்
இந்த நன்கொடையின் மூலம், பாகிஸ்தான் மக்களுக்கு இலங்கையர்களால் தானமாக வழங்கப்பட்ட, கரு விழிகளின் எண்ணிக்கை 26,215 ஆவது உயர்ந்துள்ளது.
தீவிரவாதச் செயல்களால் கண் பார்வையை இழந்த வீரமிக்க பாகிஸ்தான் இராணுவ வீரர்களுக்கு, மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த கருவிழிகள் பொருத்தப்படுகின்றன.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிடுவதற்கான இராணுவ வன்பொருள் மற்றும் பயிற்சி ஆகிய இரண்டிலும் பாகிஸ்தான் எங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது.
அத்துடன், வரலாற்றின் முக்கியமான காலங்களில் பாகிஸ்தான், இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தலைத் தணிக்க உதவியது என்று தான நிகழ்வின் போது இலங்கை உயர்ஸ்தானிகர், ரவி விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |