கிழக்கில் முஸ்லிம் மக்களிடையே பரப்பப்படும் தீவிரவாத சிந்தனைகள் - எச்சரிக்கும் அரசாங்கம்

Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Mar 02, 2025 05:22 AM GMT
Rakshana MA

Rakshana MA

கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கத்துக்கு, புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வு சேவை (SIS) மற்றும் இராணுவ புலனாய்வுத் துறை ஆகிய இரண்டிற்கும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், சில மத நடவடிக்கைகளுக்கான இடங்களில் நடத்தப்பட்ட கண்காணிப்பின் அடிப்படையில், குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் தீவிரவாத சித்தாந்தங்கள், புகுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

இஸ்லாத்தின் போதனைகளுக்கு முரணான சிந்தனைகள்

மேலும், இந்த தீவிரவாத சித்தாந்தங்கள் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முரணானவை. இந்நிலையில், இதுபோன்ற செயற்பாடுகளில் பெரும்பாலானவை கல்முனைப் பகுதியிலிருந்து பதிவாகியுள்ளன.

இதனையடுத்து, SIS மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவுகள், இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதை தீவிரப்படுத்தியுள்ளன. நாட்டில் மீண்டும் தீவிரவாதம் மற்றும் இனவெறி பரவுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

கிழக்கில் முஸ்லிம் மக்களிடையே பரப்பப்படும் தீவிரவாத சிந்தனைகள் - எச்சரிக்கும் அரசாங்கம் | Extremist Thoughts Spread Among Muslims At East

இதுபோன்ற பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிய நடவடிக்கை எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு அக்டோபரில் அறுகம் விரிகுடா பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக தாக்குதல்கள் குறித்து புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

உளவுத்துறை தகவல்களை கையாள்வதில் அரசாங்கம் தொழில்முறை முறையில் செயல்பட்டதாகவும், எதிர்காலத்திலும் அவ்வாறே செய்யும் என்றும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெற்றோல் நெருக்கடியின் பின்னணியிலுள்ள சதி! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

பெற்றோல் நெருக்கடியின் பின்னணியிலுள்ள சதி! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


https://chat.whatsapp.com/F13JZ76R9BM2JHb9A5XlbG