சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு குறித்து ஜீ. எல். பீரிஸ் குற்றச்சாட்டு

By Fathima Jun 10, 2024 11:25 AM GMT
Fathima

Fathima

நாட்டின் வரலாற்றில் எந்தவொரு காலத்திலும் சட்டமா அதிபருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படவில்லை எனவும் அது அரசியலமைப்பிற்கு முரணானது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுதந்திரத்துக்குப் பேரிடி

அதன்படி சட்டத்தின் நீதியை நிறைவேற்றுவதற்கு சட்டமா அதிபருக்கு தனித்துவமான பொறுப்புகள் இருப்பதாகவும், 1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சட்டமா அதிபர் ஒருவரின் சேவை நீடிக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் அவர் கூறினார்.

சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு குறித்து ஜீ. எல். பீரிஸ் குற்றச்சாட்டு | Extension Service Of Attorney General G L Peiris

மேலும் இன்னும் 34 நாட்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சட்டமா அதிபரின் பதவியை ஜனாதிபதி ஆறு மாதங்களுக்கு நீடித்தால், சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரத்துக்குப் பேரிடியாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.