9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு
நாட்டின் 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பதுளை, கொழும்பு, கம்பஹா, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை
பதுளை மாவட்டத்தின், ஊவா பரணகம, ஹாலி எல, மிகஹகிவுல, பதுளை, கந்தகெட்டிய, பண்டாரவளை, சொரணாதொட்ட, எல்ல, ஹப்புத்தளை, லுணுகலை, வெளிமடை, ஹல்துமுல்ல மற்றும் பசறை பிரதேச செயலகப் பிரிகளுக்கு மூன்றாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கண்டி மாவட்டத்தின் பாதஹேவாஹெட்ட, தெல்தோட்டை, ஹதரலியட்ட, மினிப்பே, மெததும்புர, உடநுவர, குண்டசாலை, உடபலாத, உடுதும்பர, யடிநுவர, பன்வில, தும்பனே, தொலுவ, பூஜாபிட்டிய, கங்கா இஹல கோரளே, பஸ்பாகே கோரளே, அக்குரண, கங்காவட்ட கோரளே மற்றும் ஹரிஸ்பத்துவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும்,