கொள்கலன்களை விடுவிக்க துரித வேலைத்திட்டம்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய
சுங்கப் பணிப்புறக்கணிப்பு காரணமாக குவிந்துள்ள 5000 க்கும் அதிகமான கொள்கலன்களை விடுவிக்க வார இறுதியில் துரித வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இந்த நெருக்கடியை குறைத்துக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கைகள்
தேர்தல் நெருங்கும் போது தொழிற்சங்க நடவடிக்கைகள் இடம்பெறுவது எதிர்பார்க்கப்படக்கூடிய ஒரு சூழ்நிலை எனவும், பெரும்பான்மையான தொழிற்சங்கங்கள் அரசியல் இயக்கத்துடன் இணைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ருவன்வெல்ல ராஜசிங்க கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்தார்.
வேலைநிறுத்தம் என்பது தொழிற்சங்கம் ஒன்றினால் மேற்கொள்ளப்படும் முதல் நடவடிக்கையல்ல, அதுவே கடைசி நடவடிக்கையாகும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |