தெல்தொட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள் இருவரின் முன்மாதிரியான செயல்
க/தெல்தொட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள் இருவரின் முன்மாதிரியான செயல் குறித்து தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படுகின்றது.
குறித்த இரு மாணவர்களும் ஒரு கடைக்கு முன்னால் கிடந்த ஒரு தொகை பணத்தை கண்டு எடுத்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்மாதிரியான செயல்
க/ தெல்தொட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அந்த இரு மாணவர்களின் முன்மாதிரியான வளர்ப்பும் வழிகாட்டலும் சிறந்த தலைமுறை உருவாகுவதற்கு ஒரு எடுத்து காட்டு என்று கடை உரிமையாளர் கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசை படாத இரு சிரு செல்வங்கள் என்றும் அந்த மாணவர்களை கடை உரிமையாளர் புகழ்ந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது அந்த இரு மாணவர்களின் புகைப்படமும், அவர்கள் பெற்றுக்கொடுத்த பணத்தின் புகைப்படமும் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுவதுடன் அவர்களின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.
