இலங்கையரொருவருக்கு வெளிநாட்டில் மரணதண்டனை நிறைவேற்றம்
குவைத்தில் 2015 ஆம் ஆண்டு ஷியா மசூதி மீது குண்டுவீசி 27 பேரைக் கொன்ற ஐஎஸ்ஐஎஸ் தாக்குதலில் ஈடுபட்ட பாதிரியார் உட்பட 05 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளிகளில் இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரரும் அடங்குவதாக வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.
மத்திய சிறையில் இந்த கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளதாக குவைத் அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் வர்த்தகம்
இவ்வாறு தூக்கிலிடப்பட்ட ஐந்து பேரில் மசூதி தாக்கியவர், மூன்று குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரி ஒருவரும் உள்ளடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குற்றவாளிகளில் ஒருவர் எகிப்தியர் என்றும், மற்றொருவர் குவைத் நாட்டவர் என்றும், தண்டனை பெற்ற போதைப்பொருள் வியாபாரி இலங்கையைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |