சீரற்ற காலநிலையால் தற்காலிகமாக நிறுத்தப்படும் உயர்தர பரீட்சைகள்
                                    
                    Department of Examinations Sri Lanka
                
                                                
                    G.C.E.(A/L) Examination
                
                                                
                    Weather
                
                        
        
            
                
                By Vethu
            
            
                
                
            
        
    நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சையை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பரீட்சைகள் மற்றுமொரு தினத்திற்கு மாற்றப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
குறித்த தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம், 22 ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெறும் என ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போது ஆணையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.