பரீட்சை விடைப்பத்திரங்கள் சமூக வலையத்தளங்களில் : முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு
2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைப்பரீட்சை தொடர்பாக வடமத்திய மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த வினாத்தாள்களின் விடைத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதன்படி, ஆறாம் தரத்தின் புவியியல் வினாத்தாளில் விடைத்தாள்கள் வழங்கப்பட்டதாக ஒன்றியத்தின் அனுராதபுரம் மாவட்ட செயலாளர் அசேல விஜேசிங்க(Asala wijesingha) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் இன்று(02) முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
பாடசாலை மட்ட பரீட்சைகள்
அத்துடன் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் 01ஆம் தாளில் உள்ள 03 பிரச்சினைக்குரிய வினாக்களுக்கு அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இலவச புள்ளிகளை வழங்க பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இப்பிரச்சினைக்கு இது மிகவும் நியாயமானதும் பொருத்தமானதுமான தீர்வு என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதிப்பீட்டுப் பணிகள் துரித கதியில் ஆரம்பிக்கப்பட்டு பெறுபேறுகள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |