பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு 3 வழக்குகளில் பிணை

Pakistan Imran Khan
By Fathima Apr 14, 2023 10:28 PM GMT

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது விசாரணைக்கு முன்னிலையாகாத இம்ரான்காளை கைது செய்ய முற்பட்ட போது இம்ரான்கான் ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மேமாதலில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு 3 வழக்குகளில் பிணை | Ex Pm Of Pakistan Granted Bail

இந்த மோதல் தொடர்பாக இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் பிணை கேட்டு இம்ரான்கான் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பில் லாகூரில் உள்ள நீதிமன்றம் விசாரணையை மேற்கொண்டுள்ளது.

இந்த விசாரணை முடிவில் 3 வழக்குகளில் அடுத்த மாதம் (மே) 4 ஆம் திகதி வரை இம்ரான்கானுக்கு இடைக்கால பிணை வழங்கப்பட்டுள்ளது.