பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு பிணை நீட்டிப்பு

Pakistan Imran Khan
By Fathima Apr 28, 2023 07:11 PM GMT
Fathima

Fathima

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு பிணை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பணமோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் பிணை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகாததால் அவரை கைது செய்ய கோரி பிடிவாரண்ட் பிறப்பித்து லாகூர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு பிணை நீட்டிப்பு | Ex Pm Imran Khan Granted Bail In Pakistan

பிணை நீட்டிப்பு

இதனை தொடர்ந்து இம்ரான்கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பிணையை நீட்டிக்க கோரி இம்ரான்கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த லாகூர் நீதிமன்றம் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை பிணை நீட்டிப்பை அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Join Now