மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உள்ளிட்டோருக்கு விடுதலை

Ajith Nivard Cabraal Colombo Law and Order
By Madheeha_Naz May 31, 2024 08:44 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

Courtesy: Sanukshan

கிரேக்கப் பத்திரங்களில் 2012 ஆம் ஆண்டு  முதலீடு மூலம், அரசாங்கத்திற்கு 1.84 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உட்பட 5 பிரதிவாதிகளை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கையளிக்க முடியாது மற்றும் பராமரிக்க முடியாது என பிரதிவாதிகள் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் ஏனையோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில், முதற்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றவாளிகளை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஒம்புட்ஸ்மேன் அறிக்கை

இதன்படி தீர்ப்பை அறிவித்த நீதிபதி, மார்ச் 26 அன்று, இந்த பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் பிரதிவாதியால் கையொப்பமிடப்பட்டபோது, புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உள்ளிட்டோருக்கு விடுதலை | Ex Governor Of Central Bank Released

மேலும், புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டதாகவும், அதன் பிரகாரம் பழைய சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட பணிப்பாளர் புதிய குற்றப்பத்திரிகையில் கையொப்பமிடுவது சட்டத்திற்கு முரணானது எனவும் உயர்நீதிமன்ற ஒம்புட்ஸ்மேன்(அரசின் அலுவலர்கள் தவறிழைத்தாலோ, உரிமைகளை மீறினாலோ அதனைப் ஆய்வு செய்து அறிக்கை வெளியிடும் அதிகாரி) சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் குற்றப்பத்திரிகையின் செல்லுபடியாகும் தன்மை சட்டத்தின் பார்வையில் சவால் செய்யப்பட்டுள்ளதால், குற்றப்பத்திரிகையை பிரதிவாதிகளிடம் ஒப்படைக்க மறுப்பதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.