150 ஆண்டுகளுக்கு பின்னர் நாளை இடம்பெறவுள்ள அரிய நிகழ்வு!
Sri Lanka
By Nafeel
150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறதாக கூறப்படும் நிலையில் இந்த அரிய நிகழ்வானது அவுஸ்திரேலியாவில் நாளை நடக்கிறது. வழக்கமாக கங்கன சூரிய கிரகணம்,
வளைய சூரிய கிரகணம் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. ஆனால் பூரண கிரகணம் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது.இந்த கிரகணம் குறித்து சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு விளக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து முதன்மை விஞ்ஞானி எபினேசர் கூறுகையில்,நாளை (20) நடக்கும் பூரண சூரியகிரகணம் குறித்து அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் வானியற்பியல் விஞ்ஞானிகள் மூலம் விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.