கருணைக்கொலைக்கு உருகுவேயில் அனுமதி

Death Penalty Euthanasia Uruguay
By Faarika Faizal Oct 17, 2025 04:12 PM GMT
Faarika Faizal

Faarika Faizal

தென் அமெரிக்க நாடான உருகுவேயில், தீவிர நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்தினர் விருப்பப்படி கருணைக்கொலை செய்வதற்கான அனுமதி வழங்கவேண்டும் என, நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதன்படி, தலைநகர் மாண்டிவிடியோவில் உள்ள செனட் சபையில் இந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.

இலங்கை வரலாற்றில் 4 இலட்சத்தைக் கடந்த தங்க விலை

இலங்கை வரலாற்றில் 4 இலட்சத்தைக் கடந்த தங்க விலை

கருணைக்கொலை

கீழ்சபை இதற்கு ஒப்புதல் அளித்திருந்தது. மேல்சபையில் மசோதாவை கொண்டு வந்தபோது, 31 அமைச்சர்களில் 20 பேர் ஆதரவாகவாக்களித்தனர்.

இந்த சட்டம், மருத்துவ நிபுணரால் மேற்கொள்ளப்படும் கருணைக் கொலையை அனுமதிக்கிறது.

கருணைக்கொலைக்கு உருகுவேயில் அனுமதி | Euthanasia Allowed In Uruguay

ஆனால், நோயாளி தானே மருந்து எடுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதை அனுமதிக்கவில்லை.

அத்துடன், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கருணைக்கொலையை தேர்ந்தெடுக்க விரும்பினால், இரண்டு மருத்துவர்கள் அவர்களின் மனநல தகுதியை உறுதிசெய்ய வேண்டும்.

மேலும், பெல்ஜியம், கொலம்பியா, நெதர்லாந்து போல் அல்லாமல், உருகுவேயில், 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களை கருணைக்கொலை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.  

மகிந்தவின் முன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்

மகிந்தவின் முன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்

விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இலங்கை பாடகர்

விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இலங்கை பாடகர்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW