முஸ்லிம் - தமிழ் மக்களின் இன நல்லுறவைக் கட்டியெழுப்பும் நிகழ்வு (Photos)
சம்மாந்துறையில் முஸ்லிம் - தமிழ் மக்கள் மத்தியில் இன நல்லுறவைக் கட்டியெழுப்பும் நோக்கில் கலை கலாசார நிகழ்வுகளும், சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவும் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு நேற்றைய தினம் (20.04.2023) சம்மாந்துறை கோரக்கர் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்ஸில் நிதிப்பங்களிப்புடன் முஸ்லிம் எய்ட் நடைமுறைப்படுத்தும் SEDR Active Citizens எனும் செயற்திட்டத்தின் கீழ் சம்மாந்துறையில் செயற்படுத்தப்படும் towards a change (ஒரு மாற்றத்தை நோக்கி) குழுவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
சமூக நல்லிணம்
இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினர்களாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா, சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் இளங்கோவன், பள்ளிவாசல் நிர்வாக சபையினர், விளையாட்டு உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் போன்றவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதற்காக towards a change (ஒரு மாற்றத்தை நோக்கி) குழுவினர் ஒழுங்கு செய்திருந்த காட்சிப் பலகையில் இந்நிகழ்விற்கு வருகை தந்த பிரதம விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் தமது கையொப்பங்களைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

























